பொன்மகள் வந்தாள் படம் ஒ டி டி தளத்தில் வெளிவருவதற்கு முன்பே லீக்.. படக்குழு ஷாக்..

by Chandru, May 29, 2020, 12:16 PM IST

நடிகர் சூர்யா தயாரிக்க ஜோதிகா நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள். இப்படத்தை பிரட்ரிக் டைரக்டு செய்திருந்தார்.கே.பாக்யராஜ், தியாகராஜன். பார்த்திபன், பாண்டிய ராஜன். பிரதாப்போத்தன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் இன்று அமேசான் பிரைமில் பகல் 12 மணிக்கு ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்பே தமிழ்ராக்கர்ஸில் இப்படம் வெளியாகிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே படத்தை அமேசானில் ரிலீஸ் செய்தனர்.முன்னதாக இப்படத்தின் சிறப்புக் காட்சி விஐபிகளுக்கு பாஸ்வேர்டு பகிர்ந்து அமேசானில் காட்டப்பட்டது.


More Cinema News