அமீர்கான் பாணியில் சந்தானம் அரை நிர்வாண போஸ்டர்..

by Chandru, May 29, 2020, 12:22 PM IST

நடிகர் சந்தானம் மூன்று வேடத்தில் நடிக்கும் படம் டிக்கிலோனா. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 3 சந்தானத்தின் தோற்றம் இடம் பெற்றிருந்தது.
இப்படத்தில் இடம்பெறும் சந்தானத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் சந்தானம் நிர்வாண தோற்றத்தில் நிற்பது போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு தவாவை வைத்து தனது அந்தரங்க உறுப்பை மறைத்திருப்பது போலவும் அதை மற்ற நடிகர்கள் மொட்டை ராஜேந்திரன், முனிஷ்காந்த், ஆனந்தராஜ், புதுமுகம் பிரசாந்த் ஆகியோர் அதிர்ச்சியுடன் பார்ப்பதுபோல் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.ஏற்கனவே பிகே என்ற இந்தி படத்திற்காக நடிகர் அமீர்கான் இதேபோல் போஸ்டர் வெளியிட்டிருந்தார் அப்போது இது சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.


More Cinema News