சூரரைப்போற்று தியேட்டர் ரிலீசுக்காக காத்திருக்கும் சூர்யா.. மேலும் 2 பாடல்கள் வெளியிட முடிவு..

surya is waiting for sooraraipotru movie release

by Chandru, May 31, 2020, 11:16 AM IST

நடிகர் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா கொங்கொரா இயக்கி உள்ளார். ஜீவி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இப்படம் பற்றி சூர்யா கூறும்போது, சூரரைப்போற்று படத்தை தியேட்டரில் பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறேன். சூரரைப்போற்று என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இன்னும் 2 பாடல்கள் இப்படத்திலிருந்து வெளியாக உள்ளது. மிகவும் அருமையாக அமைந்திருக்கும் அப்பாடல்கள் விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.


ஏற்கனவே இப்படத்திலிருந்து பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.சூரரைப்போற்று படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கிறார்

You'r reading சூரரைப்போற்று தியேட்டர் ரிலீசுக்காக காத்திருக்கும் சூர்யா.. மேலும் 2 பாடல்கள் வெளியிட முடிவு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை