இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் ராம் மகேந்திரா. இவர் இயக்கிய "மனம்" என்ற குறும்படம் சமீபத்தில் வெளியானது. அதை நடிகர் நடிகைகள் பார்த்துப் பாராட்டி வருகின்றனர்.இப்படத்தை ராம் மஹிந்திரா இயக்கினார். இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இவர் குறும்படம் இயக்கிய கையோடு இந்தி படம் இயக்குகிறார். இதற்கான பூஜை நேற்று நடந்தது.
மாயன் சினிமாஸ், மற்றும் மானசரோவர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. எம். சிவக்குமார், உதயகுமார் ஸ்ரீதரன், காமாட்சி ஹரிகரன், ராம் மகேந்திரா, மற்றும் ஏ. ஜான் ஆகியோர் கூட்டாக இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்.
விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் இசை அமைக்கிறார். சரவணன் அரங்கம் அமைக்கிறார். மாயா தயாரிப்பு மேற்பார்வை செய்கிறார்.
இப்படம் பற்றி இயக்குநர் ராம் மகேந்திரா கூறிய தாவது, மனம் படத்திற்கு கிடைத்த ஆதரவின் பலத்தால் இன்று அடுத்த படைப்புக்கு நகர்ந்திருக்கிறோம். படப்பிடிப்பிற்குத் தயார் நிலையில் இருக்கிறோம். இப்படம் ஒரு கூட்டு முயற்சி. கூடிய விரைவில் எங்களுடைய ஹிந்திப் படத்தின் முதல் பார்வையோடு உங்களைச் சந்திக்க வருகிறோம். நன்றி என்றார்.