அமெரிக்காவில் சமீபத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாயி என்பவரை போலீஸ் அதிகாரி கொடூரமாகக் கொலை செய்தார். அதற்கு அமெரிக்காவிலும் மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது இனவெறி தாக்குதல் என்று கண்டித்தனர். இந்தியாவிலும் பல நடிகர், நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நடிகை தமன்னா தனது முகத்தில் கருப்பு கைவிரல்கள் அடையாளத்துடன் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தை வெளியிட்டு டிவிட்டர் பக்கத்தில்,உங்கள் மவுனம் உங்களைப் பாதுகாக்காது. மனிதனோ அல்லது விலங்கோ யாருக்கும் வாழ்க்கை முக்கியம் அல்லவா? எந்தவொரு படைப்பையும் முடக்குவது உலகளாவிய சட்டத்திற்கு எதிரானது. நாம் கற்றுக் கொள்ள வேண்டும், மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இரக்கத்தை வெளிப்படுத்துங்கள், அன்பைப் பயிற்சி செய்யுங்கள்எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தமன்னாவின் இந்த டிவிட்டிற்கு ஒருபக்கம் வரவேற்பு இருந்தாலும் மற்றொரு பக்கம் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. உங்களுக்கெல்லாம் வெளிநாட்டில் நடப்பதுதான் கண்ணுக்குத் தெரிகிறதா, இந்தியாவில் நடக்கும் கொடுமைகள் தெரியவில்லையா? அதை ஏன் தட்டி கேட்பதில்லை எனக் கேட்டிருக்கின்றனர்.ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்தி நடிகர் அபய் தியோலும் மறைமுகமாக தமன்னாவைச் சீண்டி உள்ளார். நமது நாட்டில் புலம்பெயர்ந்தவர்களும் ஏழைகளும் படும் அவஸ்த்தையும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் எந்த பிரபலங்களுக்கும் தெரியாதா? அதுபற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள் என நறுக்கு தெறிக்க கேள்வி எழுப்பி உள்ளார்.