வரலாறு, ஆட்டோகிராப், டான்ஸ்ர், ஒ காதல் கண்மணி போன்ற படங்களில் நடித்தவர் கனிகா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடிக்கும், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் எஸ்,பி. ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட கிருஷ்ணா இயக்கி உள்ளார்.சக்கி துரை தயாரிக்கிறார்.
கொரோனா லாக் டவுன் தளர்வில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியது. இப்படத்தின் டப்பிங்கில் கனிகா கலந்து கொண்டு பேசினார்.
இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறும்போது,உண்மையில் டப்பிங் பேசுவது ஒரு கலை. அது என் இதயம் போன்றது. இன்று டப்பிங் பேசுவது எனக்கு ரொம்பவும் ஸ்பெஷலாகும். காரணம் இது எனது தமிழ்ப் படம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்திற்காக இலங்கை தமிழ் கற்றுக் கொண்டு டப்பிங் பேசினேன் என்றார்.