கடந்த 6 வருடத்துக்கு முன்பு திரைக்கு வந்த படம் முண்டாசுப்பட்டி. போட்டோ எடுத்தால் ஆயுசு குறைஞ்சிடும் என்று கிராமத்துப் பக்கத்தில் அந்தக் காலத்திலிருந்த ஒரு மூட நம்பிக்கையை மையமாக வைத்து இக்கதையை அமைத்திருந்தார் இயக்குனர் ராம்குமார்.
இதில் விஷ்ணுவிஷால் கிராமத்துக்கு வரும் புகைப்படக்காரராக நடித்திருந்தார்.
அவரது உதவியாளராகக் காளி நடித்திருந்தார். நகைச் சுவை வேடத்தில் முனிஷ்காந்த் நடித்திருந்தார். விஷ்ணுவுக்கு ஜோடியாக நந்திதா சுவேதா வேடமேற்றார். இப்படம் வெளியாகி 6 வருடம் ஆனதையொட்டி அதில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் விஷ்ணு விஷால்.
முண்டாசுபட்டி வெளியாகி 6 வருடம் ஆகிவிட்டது. ஆனாலும் அதில் நடித்த அனுபவம் அப்படியே மனதில் நிழலாடுகிறது. கிளைமாக்ஸில் கத்தி, அருவா, சண்டை எதுவும் இல்லாமல் ஒரேயொரு கேமிராவை வைத்து படம் முடியும். இது ரசிகர்களால் கைதட்டி வரவேற்கப்பட்டது. படம் காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டாலும் அதற்கான மெனக்கெடல் ரொம்பவே அதிகம். படக் குழுவினர் கடினமாக உழைத்தனர். இந்த நேரத்தில் தயாரிப்பாளர் சி.வி.குமார், நடிகர்கள் காளி, முனிஷ் காந்த். இசை அமைப்பாளர் சீன்ரோல்டன் இயக்குனர் ராம்குமார் , உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.