டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் ஆர்வமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பவர் நடிகை திரிஷா.சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கிய கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில் சிம்புவுடன் தொலைப்பேசியில் பேசுவது போல் நடித்தார். அதுபற்றி டிவிட்டர். இன்ஸ்டாவில் அதிகம் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் இரண்டிலிருந்தும் திரிஷா திடீரென்று விலகி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது,மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் இந்த நேரத்தில் என் மனதிற்கு மறதி தேவைப்படுகிறது. இன்ஸ்டாகிராம், டிவிட்டர் டிஜிட்டல் போதையிலிருந்து சில காலம் விலகி இருக்க உள்ளேன். எல்லோரும் வீட்டிலேயே இருங்கள், பத்திரமாக இருக்கவும். இதுவும் கடந்து போகும். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன், விரைவில் சந்திப்போம் எனத் தெரிவித்திருக்கிறார் திரிஷா.