நெட்டில் ஆட்டம்போடும் பிரகதி..

Actress Pragathi stunning with her energetic dance

by Chandru, Jun 16, 2020, 10:08 AM IST

டைரக்டர் கே.பாக்யராஜ் இயக்கிய வீட்ல விசேஷங்க படத்தில் நடித்தவர் பிரகதி. பெரிய மருது, பாண்டியனின் ராஜ்ஜியத்தில், சும்மா இருங்க மச்சான், ஜெயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கு படங்களில் அக்கா,அம்மா,அண்ணி வேடங்களில் நடிக்கிறார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

சமீபகாலமாகப் பிரகதி இணை தள பக்கத்தில் தான் நடனம் ஆடும் படத்தை வெளியிட்டு வருகிறார். தனது மகனுடன் சேர்ந்து குத்தாட்ட பாடல் ஒன்றுக்கு சில மாதங்களுக்கு முன் நடனம் ஆடிய பிரகதி தற்போது சோலோவாக புதிய பாடலுக்கு மேற்கத்திய அசைவுகளுடன் நடனம் ஆடியிருக்கிறார்.திடீரென்று பிரகதி இதுபோல் நடனம் ஆடும் வீடியோக்களை வெளியிடுவது ஏன் என்று பலரும் கேட்டு வருகின்றனர். தான் இன்னும் ஃபிட்டாக இருக்கிறேன் என்பதை இயக்குனர்களுக்கு காட்டவும் அதன் மூலம்பட வாய்ப்புகள் பெறவுமே இப்படி பிரகதி ஆடிவருகிறாராம்.

You'r reading நெட்டில் ஆட்டம்போடும் பிரகதி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை