விஜய் சேதுபதி நடித்த பீட்ஸா படத்தை யாரும் எதிர்பாராத விதமாகத் திகில் படமாக அளித்து தமிழில் புதிய ட்ரெண்ட் ஏற்படுத்தினார் கார்த்திக் சுப்பராஜ். அந்த ட்ரெண்டு இன்னும் நீடிக்கிறது. இந்நிலையில் விக்ரம். துருவ் இணையும் படத்தை இயக்க உள்ளார்
கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்.
இப்படமும் ஒரு திகில் படமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 'திறவுக்கோல் மந்திரவாதி' என இப்படத்துக்கு பெயரிட விருப்பதாக தகவல் வெளி யாகி இருப்பதே இந்த சந்தேகத்துக்குக் காரணம். ஆனால் படத் தரப்பு இதை உறுதி செய்யவில்லை.
விக்ரம் மகன் துருவ் ஆதித்யா வர்மா படம் மூலம் ஏற்கெனவே ஹீரோவாக அறிமுகமாகிவிட்டார். இது தெலுங்கில் விஜயதேவர கொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆகும்.
அடுத்து தந்தை விக்ரமுடன் இணைவதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இது சியான் விக்ரமின் 60வது படம் ஆகும்.தந்தை விக்ரம், மகன் துருவ் ஒரே படத்தில் இனைவதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது விக்ரமின் 60வது படமாகவும் உருவாகவிருக்கிறது.தற்போது கார்த்திக் சுப்பராஜ் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் படத்தை இயக்கி உள்ளார்.