சுஷாந்த் தற்கொலையில் தினம் ஒரு திருப்பம்.. காதலிக்கும் நடிகரின் நண்பருக்கும் மோதல்?

பாலிவுட் இளம் திறமையான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். 'எம்.எஸ். தோனி-தி அன்டோல்ட் ஸ்டோரி', 'கை போ சே', 'சிச்சோர்', 'கேதார்நாத்' மற்றும் 'டிரைவ்' போன்ற சிறந்த படங்களில் நடித்துள்ளார். சுஷாந்த்தின் மரண அதிர்ச்சியிலிருந்து ரசிகர்கள் மீளவில்லை. நடிகரின் மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணங்களைக் கண்டறியப் பிரேதப் பரிசோதனைக்காக இன்னும் போலீஸார் காத்திருக்கின்றனர்.


நடிகரின் காதலி என்று கூறப்பட்ட ரியா சக்ரவர்த்தியின் வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்துள்ளனர். அதில் சுஷாந்தை விட்டுப் பிரிந்ததுபற்றி அவர் தெரிவித்திருக்கிறாராம்.
சுஷாந்தின் நண்பர் சித்தார்த் பிதானியேதான் சுஷாந்த்தை விட்டு தான் பிரியக் காரணம் என்று ரியா தெரிவித்திருக்கிறார். நாங்கள் இருந்த பிளாட்டில் சித்தார்த் இருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. அவரால் எனது தனிமையை (பிரை வேசி) இழந்ததாக உணர்ந்தேன். பின்னர் ஊரடங்கிற்குப் பிறகு நான் சுஷாந்த்தை விட்டு விலகிச் செல்ல வேண்டியிருந்தது, ஏனெனில் அவர் தனது நண்பர் சித்தார்த்தை எனக்காக விட்டுவிட விரும்பவில்லை என ரியா தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆனால் சுஷாந்த் மரணம் தொடர்பாக வெளிவரும் மற்ற விவகாரங்களை மூடிமறைப்பதற்காக ரியா பற்றி இப்படி கிளப்பி விடப்படுதாகவும் சிலர் கூறுகின்றனர். இந்த விஷயத்தில் போலீசார் விசாரணையில் தான் உண்மை தெரியவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ரியா சக்ரபோர்த்தி துனீகா துனீகா என்ற தெலுங்கு மற்றும் மேர் டாட் கி மாருதி, சோனாலி கேபிள், ஹாஃப் கேர்ள்ஃபிரண்ட் போன்ற இந்தி படங்களில் நடித்திருக்கிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds