தனுஷ் பட தழுவலில் கீர்த்தி சுரேஷ்...

தமிழில் தனுஷ் நடித்த புதுப்பேட்ட படத்தைத் தழுவி தெலுங்கில் பவர் பேட்ட என்ற பெயரில் படம் உருவாகிறது. இதில் நிதின் ஹீரோவாக நடிக்கிறார். கதாநாயகியாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அரசியல் திரில்லர் படமாக உருவாகும் இதனைக் கிருஷ்ணா சைதன்யா இயக்குகிறார். ஏற்கனவே நிதின் கீர்த்தி நடித்துள்ள ரங் தே படத்தின் சில காட்சிகளைப் பார்த்து தனது படத்துக்குப் பொருத்தமான ஜோடியாக இருப்பார்கள் என்று இருவரையும் ஜோடி சேர்த்திருக்கிறார் இயக்குனர். பவர் பேட்ட படத்தில் ஹீரோ நிதின் லுக்கை வடிவமைக்க ஹாலிவுட் மேகப் மேன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.