சுஷாந்த் சிங் தற்கொலை என்பது சில அதிகார வர்க்கத்தாலும் தங்களின் வாரிசுகளுக்குப் பாதிப்பு வரக்கூடாது என்று சுஷாந்த்தை ஓரங் கட்டியதாலும் நிகழ்ந்தது என்ற கருத்து உள்ளது. இதுபற்றி டைரக்டர் கே.பாக்யராஜும் அவரது மகன் நடிகருமான சாந்தனுவும் விவாதித்தனர்.
அப்போது பாக்யராஜ் கூறியதாவது: நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் படங்களில் நடிப்பதும் ஓபனிங் கிடைப்பதும் எளிது என்பது உண்மை தான். ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் வாரிசு என்பதால் மட்டும் வரும் என்பதை என்னால் ஏற்க முடியாது. இன்றைக்கும் கூட வாரிசு நடிகர்கள் பலர் வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சாதி, ஊர்க்காரர், நட்பு என்பதன் அடிப்படையில் ஒருவருக்கு உதவுவது தவறு என்று சொல்லமாட்டேன். இது தொழிலில் சகஜமாக இருப்பது தான். ஏற்கனவே சொன்னதுபோல் ஓப்பனிங்கும், நடிகர் மகன் என்பது மட்டுமே அவர்களுக்கு உதவும் என்று சொல்ல முடியாது.
சுஷாந்த்துக்கு கிரிக்கெட் வீரர் தோனியாக நடிக்க வாய்ப்பு வந்தது அவ்வளவு பெரிய வாய்ப்பு வரும்போது பலர் பாராட்டுவார்கள் சிலருக்குப் பொறாமை வரும். அது அவருக்குச் சாதக, பாதகமாகஅமையும் என்பது உடனிருப்பவர்கள் அவருக்கு உணர்த்தி எச்சரிக்கை செய்து எல்லாவற்றையும் எதிர்கொள்ளச் சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் செய்தார்களா என்பது தெரியவில்லை. அதற்காக அவர் உச்சக் கட்ட முடிவை எடுத்திருக்கக்கூடாது.
இவ்வாறு கே.பாக்யராஜ்.