தல அஜீத் படம் ஒடிடி தளத்தில் ரிலீஸ்? தயாரிப்பாளர் பதில்..

Thala Ajiths Valimai is theatrical release or not

by Chandru, Jun 24, 2020, 15:31 PM IST

நடிகர் அஜீத்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனிகபூர் அடுத்து அஜீத் நடிக்கும் வலிமை படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். தீபாவளிக்கு வெளியிடும் எண்ணத்துடன் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. திடீரென்று குறுக்கிட்ட கொரோனா வைரஸ் ஊரடங்கு படப்பிடிப்பை முடக்கிவிட்டது.


கொரோனா ஊரடங்கு முடிந்து படப்பிடிப்பு தொடங்கினாலும் தியேட்டர்கள் திறக்கப்படுமா என்ற கேள்விக்குப் பதில் கிடைக்காத நிலை இருக்கிறது. இதனால் பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் வலிமை படமும் ஒடிடி தளத்தில் வெளியாகுமோ என்று பலருக்குச் சந்தேகம் எழுந்தது.இது குறித்து தயாரிப்பாளர் போனிகபூரிடம் கேட்டபோது, பிரமாண்ட படங்கள் 70 எம் எம் திரையில் பார்க்கும் சந்தோஷமே வேறு. வலிமை தியேட்டரில் தான் முதலில் ரீலீஸ் ஆகும் எனத் தெரிவித்து குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

You'r reading தல அஜீத் படம் ஒடிடி தளத்தில் ரிலீஸ்? தயாரிப்பாளர் பதில்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை