சாத்தான்குளம் தந்தை மகன் போலீசால் அடித்து கொலை தூத்துக்குடி சாத்தான் குளத்தைச் சேர்ந்தவர் பி.ஜெயராம் (59). இவரது மகன் ஃபெனிக்ஸ் (31). கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கில் கடை திறந்து வைத்திருந்ததாகக் கூறி இருவரையும் விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனர். அவர்கள் இருவரையும் போலீஸார் தாக்கினர். பின்னர் கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. திரையுலகினர் ஆவேசமாகக் குரல் எழுப்பி உள்ளனர்.
நடிகை குஷ்பு கூறும்போது.சட்டம் இனியும் தாமதமில்லாமல் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று எதிர்பார்க்க வேண்டி உள்ளது. இந்த குற்றவாளிகள் தப்பிக்கக்கூடாது. குடும்பத்தினர் அவர்களின் அன்பானவர்களை இழந்திருக்கின்றனர். நீதி தாமதமாவது நீதி மறுக்கப்படுவதற்குச் சமம் என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி கூறும்போது,இது மனிதத் தன்மையற்ற செயல்.ஜெயராஜ்.பெனிக்ஸீக்கு நீதி கிடைத்தே ஆக வேண்டும். சட்டத்தை விட யாரும் உயர்ந்தவர் கிடையாது. மனித தன்மையற்ற செயலுக்கு நீதி கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
டைரக்டர் பா.ரஞ்சித் டிவிட்டரில் கூறும் போது. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல், மிகக் கொடூரமாக நிகழ்த்தப்பட்டிருக்கும். சாத்தான் குளம் தந்தை, மகன் படுகொலைக்கு அவர்களின் உடல் நலக் குறைபாடு தான் காரணம் என்று அறிக்கைவிடுத்து, படுகொலைக்குக் காரணமான காவலர்களைக் காப்பதற்குத் துணியும் தமிழக அரசே! நீங்கள் தான் மக்களின் அரசா??எனக் கேட்டிருக்கிறார்.