நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா. இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். சமூகச் சேவை அமைப்புகளுடன் இணைந்து ஊட்டச் சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்குச் சத்தான உணவுகள்கிடைப்பதற்கான முயற்சி மேற்கொண்டிருக்கிறார். பலருக்கு ஆலோசனைகளும் வழங்குகிறார்.
திவ்யா சத்யராஜின் சேவையைப் பாராட்டி அமெரிக்காவின் சர்வதேச தமிழ் பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டா் பட்டம் வழங்கி இருக்கிறது, கொரோனா தொற்று பரவல் காரணமாக டாக்டர் பட்டம் வழங்கும் விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.இது பற்றி திவ்யா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:அமெரிக்கச் சர்வதேச தமிழ் பல்கலைக் கழகத்தின் டாக்டர் பட்டம் பெறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அமெரிக்கச் சர்வதேச பல்கலைக்கழகத்தின் நிறுவனர் டாக்டர் செல்வின் குமாரருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் புத்திசாலி மாணவி கிடையாது. ஆனால் கடின உழைப்பாளி. அறிவாளியாக இருப்பதை விட உழைப்பாளியாக இருப்பது தான் சிறந்தது என்று அப்பா சொல்லியிருக்கிறார். ஆரோக்கியமான வாழ்க்கை வசதி உள்ளவர்களுக்கு தான் என்பது நியாயம் கிடையாது. தமிழ் நாட்டில் குறைந்த வருமானத்தில் வாழ்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரைவில் ஒரு இயக்கம் ஆரம்பிக்க உள்ளேன்.
இவ்வாறு திவ்யா தெரிவித்திருக்கிறார்.