ஒடிடி தளம்போல் ஏடிடி தளம் உள்ளது. அதாவது எனி டைம் தியேட்டர். இத்தளத்தில் இயக்குனர் ராம்கோபால் வர்மா ஏற்கனவே தான் இயக்கிய கிளைமாக்ஸ் என்ற படத்தை சென்சார் கட் இல்லாமல் வெளியிட்டு ருசி கண்டார். கிளைமாக்ஸ் படம் ஷ்ரேயாஸ் ஈடியில் முதன்முறையாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இந்த ATT (Any Time Theatre) தளம் ஷ்ரேயாஸ் குழுவால் தொடங்கப்பட்டுள்ளது. வெறும் 50,000 பார்வைகளை மட்டுமே ஏடிடி தளம், எதிர்பார்த்தது, ஆனால் பிரம்மாண்டமான 2,75,000 லாகின்களும், 1,68,596 கட்டணம் செலுத்திய பார்வைகளும் படம் வெளியான 12 மணி நேரத்தில் கிடைத்தன. ஒட்டுமொத்த மாக 2,89,565 பார்வைகள் கிடைத்துள்ளது.
கிளைமாக்ஸ் படத்தின் பெரும்வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் ராம்கோபால் வர்மா அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமான நேக்டு நங்கா நக்னம் கவர்ச்சி படத்தை நாளை (ஜூன் 27) வெளியிடவுள்ளார்.
நேக்டு நங்கா நக்னம், ஏடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் இரண்டாவது ராம்கோபால் வர்மா திரைப்படமாகும் இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் காணக் கிடைக்கும். இந்த தளத்தில் 5 மொழிகளில் வெளியாகும் முதல் படமும் இதுவே.
சினிமா உலகில் ஆன்லைன் தியேட்டர் என்ற விஷயத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஷ்ரேயாஸ் ஈடியின் புதிய வெர்ஷன் ஏராளமான வெற்றிப்படங்களை வரும் 2021 மார்ச் இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளது. ராம் கோபால் வர்மா படங்கள் தவிர்த்து, 302, சிவன் உள்ளிட்ட பல தெலுங்கு படங்களின் நேரடி வெளியீட்டை மற்ற 10 மல்டிப்ளெக்ஸ்களும் காணவுள்ளன. நயன்தாரா நடிக்கும் தமிழ்த் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பும் நேரடியாக ஷ்ரேயாஸ் ஈடியின் மூலம் வெளியாகவுள்ளது.