விஷாலின் சக்ரா படத்தின் டிரெய்லரில் மோடி பேச்சு.. என்ன சொல்கிறார்..

by Chandru, Jun 28, 2020, 11:29 AM IST

'சக்ரா 'படத்தின் ட்ரெய்லரில் மோடியின் பேச்சு வசனங்கள் இடம் பெற்றுள்ளது பரபரப்பாகியுள்ளது. விஷால் நடித்துள்ள 'சக்ரா' படத்தின் ட்ரெய்லர் 4 மொழிகளில் வெளியாகி இருக்கிறது. டிரெய்லரில் வரும் வசனங்கள் படத்தின் மீது எதிர்பார்ப்பை எகிற வைப்பது மட்டுமல்ல பரபரப்பான படம் என்பதற்கான முன்னோட்டமாகவும் இருக்கின்றன.

இதோ அந்த ட்ரெய்லரில் வரும் வசனங்கள்:
வசனம் 1 : அடையார் சர்க்கிள்ல நடந்திருக்கு .ஓவர்.
ஏழு வீட்ல ராபரி.
வசனம் 2: பெசன்ட் நகர் 13 வீட்ல ராபரி நடந்திருக்கு ஓவர்.
வசனம் 3: நாயகன் விஷால்: ஆகஸ்ட் 15 இண்டிபெண்டன்ஸ் டே .டோட்டல் சென்னை சிட்டியே அதிகப்படியா கண்காணிப்புக்குள்ள இருக்குற ஒரு நாள், ஆனா அன்னிக்கு...
வசனம் 4 : நாயகன் : இது ஏதோ பர்ட்டிக்குலர் ஏரியாவுல, இல்ல பர்ட்டிக்குலர் ஸ்ட்ரீட்ல , நடந்த ராபரி கிடையாது. திஸ் இஸ் சம்திங் பிக்.
வசனம் 5 : கமிஷனர் : 49 வீடுய்யா, சிட்டியே பதறிகிட்டு இருக்கு
வசனம் 6 : இன்ஸ்பெக்டர்: மத்த வீட்ல கை வச்சது பிரச்சனை இல்லய்யா, இந்த வீட்ல கை வச்சது தான் பிரச்சனை அசோக சக்ரா,மிலிட்டரில குடுக்குற மிகப்பெரிய கவுரவம், அந்த மெடல திருடிருக்கான், சும்மா விட்ருவானா அவன்?
வசனம் 7: DFH மேனேஜர்: நீங்க போலீசா?
வசனம் 8: நாயகன்: மிலிடரி ...!
வசனம் 9 : நாயகி : இந்த சென்சிட்டிவான கேஸ் நான்தான் இன்வஸ்டிகேட் பண்றேன் சந்துரு, கூடிய சீக்கிரமா அந்த புறம்போக்குகளை பிடிப்பேன்
வசனம் 10: நாயகன் : ஒரு நாட்டையே அச்சுறுத்துற தீவிரவாதிகள் ஆக்டிவிட்டீஸை கண்காணிக்க ஒரு நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்ஸி பண்ற ஆராய்ச்சிய விட, ஒரு சராசரி மனிதனோட தேவைகளையும், அவனோட ஆசைகளையும் கண்டுபிடிக்கிறதுக்கு ஒரு கார்ப்பரேட் கம்பெனி பண்ற ஆராய்ச்சிதான் அதிகம்னு சொல்ல வர்றீங்க..
வசனம் 11: நாயகி: கேர்ஃபுல்லா இருங்க , சஸ்பெக்ட் எப்ப வேணா அட்டாக் பண்ணலாம்...
வசனம்: 12 நாயகன் குரல்: நிச்சயமாக நாம் தேடிட்டிருக்குற கிரிமினல் , நம்ம கண்ணுக்கே, தெரியமாட்டான்.
வசனம் 13 :யாரோ HACK பண்ணிருக்காங்க...

வசனம் 14: நாயகன் : இப்பதான் சீண்டி விட்ருக்கேன் த கேம் பிகின்ஸ் .....

வசனம் 15: நாயகன் : நம் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் மட்டும் இல்ல, வயர்லஸ் நெட் ஒர்க்கும் கூட ஆபத்துதான்.

WELCOME TO DIGITAL INDIA...என்று நாயகன் விஷால் சொன்ன பிறகு மோடியின் பேச்சு இடம் பெறுகிறது.அது படத்தில் இடம்பெறும் போது எந்த விதமான அர்த்தத்தைக் கொடுக்கிறது என்பதைப் படம் பார்த்தால் தான் புரியும் என்கிறார்.
இப்படத்தை இயக்கியுள்ள எம் .எஸ் .ஆனந்தன். விஷால் பிலிம் பேக்டரி சக்ரா படத்தை தயாரித்துள்ளது.


Speed News

 • டெல்லி, மும்பை, சென்னையில்

  கட்டுப்படாத கொரோனா பரவல்

  இந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 

  டெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.  மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.  

  Jul 6, 2020, 12:49 PM IST
 • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட

  11,300 வென்டிலேட்டர்கள் சப்ளை

  கொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன. 

  இந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார். 

  Jul 4, 2020, 14:34 PM IST
 • சாத்தான்குளம் வழக்கில் 

  மேலும் 4 பேர் கைது

  சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.

  இந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

  Jul 4, 2020, 14:30 PM IST
 • அமைச்சர் மனைவிக்கு கொரோனா..

  தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.

  ஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

  Jul 4, 2020, 14:26 PM IST
 • மும்பையில் கொரோனாவுக்கு

  நேற்று 36 பேர் உயிரிழப்பு

  நாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய  பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது. 

  Jul 1, 2020, 13:53 PM IST