கொரோனா லாக்டவுனில் தந்தை ஆன நடிகர்..

by Chandru, Jun 29, 2020, 18:07 PM IST

விஜய் சேதுபதி நடித்த, இதற்கு தானே ஆசைப்பட்டாய் படத்தில் சுமார் மூஞ்சி குமார் வேடத்தில் நடித்தவர் டேனியல் அன்னி போப். ரங்கூன், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது மனைவி டெனிஷா சமீபத்தில் பிரசவத்துக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

தந்தையானது குறித்து டேனியல் டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி வெளிப்படுத்தி இருக்கிறார். இன்று இறைவன் ஆசியால் தந்தையானேன். ஆண் குழந்தை பிறந்தது. உங்கள் ஆசியும் பிரார்த்தனையும் என் குழந்தைக்குத் தொடர்ந்து கிடைக்கட்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


More Cinema News