ஆண்பாவம் கொல்லங்குடி கருப்பாயிக்கு விபத்து.. டூ வீலர் மோதியதில் கால் எலும்பில் முறிவு..

by Chandru, Jun 29, 2020, 18:55 PM IST

பாண்டிய ராஜன் நடித்த ஆண்பாவம், கோபாலா கோபாலா போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் சீனியர் நடிகை கொல்லங்குடி கருப்பாயி. இவர் பிரபலமான பல்வேறு கிராமிய பாடல்கள் பாடியிருக்கிறார். அத்துடன் அகில இந்திய வானொலியில் 30 வருடம் பணியாற்றி இருக்கிறார், தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றிருக்கிறார்.

கொல்லங்குடி கருப்பாயி நேற்று சாலையைக் கடந்தபோது வேகமாக வந்த டூவீலர் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டார். அருங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு இடது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது அதற்கு டாக்டர்கள் மாவு கட்டு போட்டுள்ளனர். கை, கால்களில் ஆங்காங்கே சிராய்ப்புகளும் ஏற்பட்டிருக்கிறது அதற்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.


More Cinema News