ஒடிடி வரிசையில் ராம் கோபால் வர்மாவின் 3 திரைப்படம்..

RGV Three films On OTT Release

by Chandru, Jun 30, 2020, 10:23 AM IST

ஒரு தம்பதியின் உருக்குலைந்த தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய கதையை அலசுகிறது நேக்கட். இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் ஈர்க்கக்கூடிய கேமரா கோணங்களும் காட்சியமைப்பும் படம் முழுக்க பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
https://rgvworld.the-ally.com என்ற தளத்தில் நேக்கட் படத்தைக் காணலாம். 30,000க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இப்படம் தொடர்ந்து பார்க்கப்பட்டு கொண்டிருக்கிறது.

இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இது படைப்பாளிகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தடையற்ற ஸ்ட்ரீமிங்கை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க உதவுகிறது. வாங்குபவர்களுக்கு, உரிமையாளர்களுக்கு பயன் தரும் வகையில் இந்த நிறுவனம் இந்த தொழில் நுட்பத்தின் காப்புரிமையை கொண்டுள்ளது.

படைப்பாளிகளைப் பொறுத்த வரை, மேம்பட்ட பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட டிஆர்எம், நெறிப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட உள்ளடக்க விநியோகம் மற்றும் நிகழ் நேர பரிவர்த்தனைகளில் 100% வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிலிருந்து அவர்கள் பயனடைகிறார்கள்.இதற்கு முன்னணி இயக்குநர் ராம் கோபால் வர்மா தற்போது சாட்சி.“Allyயின் தியேட்டர் அட் ஹோம் ஒரு சிறந்த திட்டம். முதல் முறையாக இது நிகழ் நேரத்தில் வெற்றிகரமான பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் திறனை எனது குழுவுக்கு வழங்கியது. ப்ளாக் செயின் தொழில்நுட்பம் மூலம் அதிகமான பயனர்களைப் பாதுகாப்பாக அடைய முடிகிறது.

பார்வையாளர்களுக்காக புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த உதவுகிறது. பணம் செலுத்திப் பார்க்கும் வகையில் ப்ரீமியம் உள்ளடக்கங்களை உலகம் முழுவதுமுள்ள பார்வையாளர்களுக்கு நேரடியாகக் கொண்டு செல்வதில், உள்ளடக்க விநியோகத்தில் அவர்களின் தொலை நோக்கு பார்வை மூலம் Ally நிறுவனம் நிச்சயம் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது” என்று ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.ராம் கோபால் வர்மா மற்றும் அவரது குழுவினர் இந்த டிஜிட்டல் ப்ளாக் பஸ்டரின் வெற்றியின் மூலம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அதோடு அவர்களின் அடுத்த படமான கொரோனா வைரஸ் படத்தையும் வெளியிடத் திட்டமிட்டு வருகிறார்கள். உலகிலேயே கொரோனா வைரஸ் பற்றிப் பேசும் முதல் படமாக இது இருக்கும். மர்டர் என்ற மற்றொரு படமும் டிஜிட்டல் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.


நேக்கட் படம் வெளியீட்டுக்குப் பிறகு, பல தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தை the-ally.com ஈர்த்துள்ளது. அவர்கள் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்ற, ஊரடங்கு காரணமாக தியேட்டர்களிலிருந்து விரைவாக எடுக்கப்பட்ட தங்களின் புதிய படங்களை மறுவெளியீடு செய்யப் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். அவற்றில் அதர்வாவின் செம்ம போத ஆகாத, கிஷோரின் திலகர், துருவாவின் காதல் கசக்குதய்யா, போஸ் வெங்கட்டின் கன்னிமாடம் ஆகிய படங்கள் மறுவெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. அதே நேரத்தில் தேவதாஸ், கள்ளன், மங்கி டாங்கி போன்ற புதிய படங்களும் the-ally.comல் விரைவில் வெளியாகின்றன. Ally மற்றும் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள், படைப்பாளிகள் மற்றும் அவர்களது வெளியீட்டு திட்டங்களுக்கு இடையே
இந்த புதிய கூட்டாண்மை உண்மையில் ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக உள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை