நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு வலைவிரிக்கும் இளம் ஹீரோயின்கள்..

by Chandru, Jun 30, 2020, 10:08 AM IST

வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். அவருக்கு ஏற்கனவே நடிகை ரைசா வலை விரித்தார். பிக்பாஸில் தொடங்கிய இவர்களின் நட்பு சினிமாவரை நீடித்திருக்கிறது. அவ்வப்போது முதலே ஹரிஷை பற்றி மெஜேச் போட்டு தனது உறவை நீடித்து வருகிறார். இந்நிலையில் ஹரிஷின் பிறந்த நாளான நேற்று இளம் நடிகைகள் வாழ்த்து சொல்லி அவரை குளிர வைத்தனர்.

நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், வரலட்சுமி சரத்குமார், அதுல்யா ரவி, இந்துஜா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் விவேக் தெரிவித்த வாழ்த்தில், இந்த இளம் வயதிலேயே ஓர் நல்ல ஹீரோ/குணசித்ர பாத்திரம் ஏற்றுத் தாராள பிரபுவில் நடித்த சகோ ஹரிஷ் கல்யாணுக்கு என் மனம் மைழ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்திருக்கிறார். மேலும் நடிகர்கள் ஆர்யா, சாந்தனு ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.ஹரிஷ் கல்யாண் தற்போது பிரியா பவானி சங்கருடன் இணைந்து பெல்லி சூப்புலு தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.


More Cinema News