ராகவா லாரன்ஸ் படம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் உறுதி..

Ragava Lawrence Hindi Film Lakshmi Bomb on OTT Release

by Chandru, Jun 30, 2020, 09:59 AM IST

தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா படம் இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. தமிழில் சரத்குமார் நடித்த திருநங்கை வேடத்தை இந்தியில் அக்ஷய் குமார் ஏற்று நடித்திருக்கிறார். ராகவா லாரன்ஸ் இயக்கி உள்ளார். இப்படம் முடிந்து திரைக்கு வரவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் புதிய படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் அக்‌ஷய்குமாரின் லட்சுமி பாம் ஒடிடி தளமான டிஸ்னி ஹாட் ஸ்டாரில் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது.இது குறித்து அக்ஷய்குமார் கூறும்போது, லட்சுமி பாம் படத்தில் திருநங்கையாக நடிக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமாக இது அமைந்திருக்கிறது. இப்படத்தின் கதையைப் பல வருடங்களுக்கு முன் நான் கேட்டேன். இது காமெடி கலந்த திகில் படம். இப்படத்தின் பெருமை எல்லாம் இயக்குனர் ராகவா லாரன்சை சேரும் என்றார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை