அமீர்கான் பட நடிகர் தள்ளுவண்டியில் பாட்டுப் பாடி காய் கனி விற்கிறார்..

Actor Javed Hyder Selling Vegetables

by Chandru, Jun 30, 2020, 09:53 AM IST

கோவிட் 19 மக்களையும் அரசுகளையும் உலுக்கி இருக்கிறது. பலர் வேலை இழந்து வருமானம் இன்றி தவிக்கின்றனர். சினிமாவும் முடங்கி விட்டதால் நடிகர் முதல் தொழிலாளர்கள் வரை வருமானமில்லாமல் இருக்கின்றனர்.அமீர்கான் நடிக்கும் குலாம் படத்தில் நடித்து வருபவர் ஜாவித் ஹைதர். இவர் வருமானம் இல்லாமலிருப்பதால் மும்பையில் தெருவில் பாட்டு பாடி தள்ளுவண்டியில் காய்கனி விற்கிறார்.இந்த வீடியோ நெட்டில் வெளியாகி வைரலானது.

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.ஆனால் இதுகுறித்து ஜாவித் ஹைதர் கூறும்போது,கோவிட் 19ல் ரசிகர்களின் விழிப்புணர்வுக்காக இந்த டிக்டாக் வீடியோவை வெளியிட்டேன். நான் தெருவில் தள்ளுவண்டியில் காய் கனி விற்கவில்லை. இந்த நேரத்தில் வருமானத்துக்காக இப்படி கூட வேலை செய்து சம்பாதிக்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த வீடியோ வெளியிட்டதாகத் தெரிவித்தார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை