அமீர்கான் வீட்டில் கொரோனா.. தாய்க்காக பிரார்த்தனை செய்ய கோரிக்கை..

Aamirkhan staff members tested positive for the virus.

by Chandru, Jul 1, 2020, 10:22 AM IST

கொரோனா தொற்று ஒருபக்கம் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை வெளியிடப்பட்டாலும் மறுபக்கம் இருமடங்காக அதிகரிக்கும் நிலைதான் காணப்படுகிறது, கடந்த மாதம் வலிமை படத் தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் சிலருக்கு கொரோனா தொற்று பரவியது. அவர்களுக்கு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் குணம் அடைந்தனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டில் பணியாற்றும் சிலருக்கு கொரோனா தொற்று பரவியது. அவர்கள் மருத்துவ ஊழியர்கள் அழைத்துச் சென்று பரிசோதித்ததில் தொற்று உறுதியானது.

இது குறித்து ஆமிர்கான் கூறும் போது, என் வீட்டில் வேலை பார்க்கும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர், எனக்கும், என் மனைவிக்கும் சோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. என் அம்மாவுக்குச் சோதனை செய்ய வேண்டி இருக்கிறது. அவருக்குத் தொற்று இருக்கக்கூடாது என்று பிரார்திக்க அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஆமிர்கான் கூறினார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை