நடிகை பூர்ணா வழக்கில் தங்கக் கடத்தல் கும்பல் கைவரிசை.. திரையுலகில் பலரிடம் விசாரணை..

Actress Poorna Case: Gold smugglers Involved

by Chandru, Jul 1, 2020, 14:33 PM IST

சவரக்கத்தி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகை பூர்ணா. ஒரு மர்ம கூட்டம் தன்னை பிளாக் மெயில் செய்ய முயற்சித்ததாக சமீபத்தில் கேரள போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் கேரள போலீஸார் 7 பேரை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, மலையாள நடிகர் தர்மஜன் போல்கட்டி 'நடிகை பிளாக் மெயில்' வழக்கு தொடர்பாக போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

போலீச்சாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் அவர் கூறியதாவது: சில மாதங்களுக்கு முன்பு எனக்கு ஒரு அழைப்பு வந்தது, அவர்கள் சில தங்கக் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சொன்னார்கள். மேலும் நடிகைகள் பூர்ணா (ஷம்னா காசிம்) மற்றும் மியா ஜார்ஜ் ஆகியோரின் எண்களைத் தர முடியுமா என்று என்னிடம் கேட்டார்கள். கோடிக்கணக்கான மதிப்புள்ள பெரிய வணிகங்களைக் தாங்கள் கையாள்வதாகக் கூறினர்.

அவர்கள் கடத்தலில் எனது ஈடுபாட்டை நாடவில்லை, அவர்கள் மியா மற்றும் ஷம்னா காசிம் ஆகியோரின் எண்களை மட்டுமே கேட்டனர். அவர்கள் தொடர்ந்து என்னை அவர்கள் அழைக்கத் தொடங்கிய பிறகு, நான் போலீசில் புகார் செய்து விடுவேன் என்று மிரட்டினேன், அதன் பிறகு என்னை அழைப்பதை நிறுத்தி விட்டனர். இவ்வாறு தர்மஜன் தெரிவித்தார்.இந்த வழக்கில் மலையாள திரையுலகை சேர்ந்த இன்னும் பலரிடம் போலீஸார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை