நடிகை வனிதாவை மறைமுகமாக தாக்கிய கஸ்தூரி..

Actress Kasthuri Indirectly Criticise Vanitha

by Chandru, Jul 1, 2020, 15:12 PM IST

நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்தார். இதையடுத்து பீட்டரின் மனைவி போலீசில் புகார் அளித்தார். முறைப்படி என்னிடம் விவாகரத்து பெறாமல் திருமணம் செய்திருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதைக்கண்ட நடிகை லட்சுமி ராம கிருஷ்ணன் வனிதாவிடம் கேள்வி எழுப்பினார். சட்டம் தெரிந்தும் படித்தவர்கள் செய்யும் வேலையா இது என்றார். அதைக்கண்டு கோபம் அடைந்த வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனை திட்டித் தீர்த்தார். இது நீங்கள் நடத்தும் டிவி ஷோ அல்ல. அப்பாவிகளை மிரட்டியது போல் என்னை மிரட்ட முடியாது. நீங்கள் ஒன்றும் ஜட்ஜ் கிடையாது. நான் தெரிந்தோ,தெரியாமலோ தவறு செய்திருந்தால் அதை நாங்களே தீர்த்துக்கொள்வோம். நீங்கள் தலையிட வேண்டாம் என்றார். அதைக்கண்ட லட்சுமி ராமகிருஷ்ணன், இத்தோடு நம் வாதங்களை நிறுத்திக் கொள்வோம் என்று கப்சி ஆனார்.
தற்போது நடிகை கஸ்தூரி வனிதாவை மறைமுகமாக வசை பாடியிருக்கிறார்.

பாசாங்குத்தனத்தின் வரையறை என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள மெசேஜில் , உங்கள் முழு வாழ்க்கையையும் சமூக ஊடகங்களில் வெளியிடுவது, உங்கள் குடும்பத்தினரையும் குழந்தைகளையும் யூடியூப்பில் இணைப்பது, பின்னர் விஷயங்கள் உங்களுக்கு எதிராகத் திரும்பும்போது தனியுரிமை கேட்பது என்றதாக இருக்கிறது.
ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது சட்டப்பூர்வமான மற்றும் பிறரைப் பாதிக்காத வரை மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.
நடிகை கஸ்தூரியும் வனிதாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றியபோது அங்கும் மோதிக்கொண்டனர். அந்த மோதல் இப்போதும் தொடர்கிறதா என்று நெட்டிஸன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை