இந்தியன் 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமா..? கிளாமர் ஹீரோயின் பதில்..

by Chandru, Jul 6, 2020, 10:32 AM IST

இயக்குனர் ஷங்கர் படங்கள் பிரமாண்டத்துக்கு பெயர் பெற்றது போலவே பாடல் காட்சிகளுக்கும் புகழ் பெற்றது. இதற்காக மெனக்கெட்டு யாரும் செல்லாத நாடுகளுக்கு சென்றும், பிரமாண்ட அரங்குகள் அமைத்தும் படமாக்குவார். அதுவும் ஸ்பெஷல் பாடல் என்ற பெயரில் ஒரு பாடலுக்கு பிரபல ஹீரோயின்களை ஆட வைப்பார்.தற்போது கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2ம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இதில் ஏற்கனவே காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் என இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். அவர்கள் போதாதென்று மற்றொரு நடிகையை ஸ்பெஷல் பாடலுக்கு ஆட வைக்க எண்ணி உள்ளாராம். அந்த பாடலில் பாயல் ராஜ்புத் ஆடவிருப்பதாக தகவல் பரவியது. இவர் தெலுங்கில் அஜய் பூபதி இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான ஆர் எக்ஸ் 100 படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

இந்தியன் 2படத்தில் ஸ்பெஷல் பாடலுக்கு நடனம் ஆடுவதாகப் பரவிய தகவலுக்கு அவர் பதில் அளித்திருக்கிறார். இதுபற்றி பாயல் கூறும்போது, இந்தியன் 2ம் பாகம் படத்தில் நான் ஸ்பெஷல் நடனம் ஆடுவதாக வரும் தகவல்கள் உண்மை அல்ல. இதுவரை அப்படத்தரப்பிலிருந்து என்னை யாரும் அணுகவில்லை. இதுபோல் என்னைப்பற்றி எத்தனை வதந்திகள் பரவுகிறது என ஆண்டவனுக்குத் தான் தெரியும். கொரோனா ஊரடங்கில் வீட்டில் இப்போது ஜாலியாக பொழுதைக் கழித்து வருகிறேன் என்றார்.


Leave a reply

Speed News

 • ஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு..

  ஆக.12ம் தேதி விசாரணை

  ஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.

  சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

  இதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது. 
  Aug 10, 2020, 14:48 PM IST
 • பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா..

  முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார். 

  Aug 10, 2020, 14:41 PM IST
 • குஜராத்தி்ல் முகக்கவசம் அணியாவிட்டால்

  ஆயிரம் ரூபாய் அபராதம்..

  குஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். 

  Aug 10, 2020, 14:33 PM IST
 • ராஜஸ்தானி்ல் நாளை மாலை

  பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..

  ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.

  இந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது. 

  Aug 10, 2020, 14:31 PM IST
 • டெல்லி, மும்பை, சென்னையில்

  கட்டுப்படாத கொரோனா பரவல்

  இந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 

  டெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.  மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.  

  Jul 6, 2020, 12:49 PM IST

More Cinema News