கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் ஜெகமே தந்திரம். இப்படம் தியேட்டரில் ரிலீஸ் செய்ய எண்ணியிருந்தனர். கொரோனா தடையால் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் தியேட்டர் திறப்பது எப்போது என்று தெரியாத நிலை உள்ளது.இதனால் படத்தை முடித்து ரிலீஸுக்கு காத்திருக்கும் படத் தயாரிப்பாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்திருக்கின்றனர். சில தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது.
தனுஷின் ஜெகமே தந்திரம் படம் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டதை மறுத்து வந்தனர். தீபாவளிக்குக் கூட படங்கள் வெளிவருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் ஜெகமே தந்திரம் படத்தை ஒடிடி கைப்பற்ற முயன்று வருகிறது. படத்தைப் பெரிய விலைக்குக் கேட்கிறார்களாம். படத் தயாரிப்பு நிறுவனம் தனுஷிடம் ஆலோசித்த பிறகே ஒடிடியில் ரிலீஸ் செய்வதா? இல்லையா என்பது பற்றி இறுதி செய்யப்படும் என்று கூறியிருக்கிறது. நடிகர் தனுஷோ தயாரிப்பாளர் தான் பட ரிலீஸ் பற்றி முடிவு செய்ய வேண்டும் என்று கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இது தனுஷிடம் கிடைத்த சம்மதமாகவே தயாரிப்பு தரப்பு முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து ஜெகமே தந்திரம் ஒடிடி தளத்தில் களமிறங்கத் தயாராகி வருகிறது.இதுவரை பிரபல நடிகர்கள் படம் எதுவும் ஒடிடியில் ரிலீஸ் ஆகவில்லை. முதன்முறையாக தனுஷ் படம் ஒடிடிக்கு வருவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.முன்னதாக யோகிபாபு நடித்திருக்கும் காக்டெயில், வரலட்சுமி நடித்திருக்கும் டேனி ஆகிய படங்கள் ஒடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.