இந்தி படத் தயாரிப்பாளர் ஹரிஷ் ஷா. கடந்த பத்து ஆண்டுகளாகத் தொண்டை புற்றுநோயுடன் போராடி வந்தார். இன்று அவர் மரணம் அடைந்தார் . அவருக்கு வயது 76. உடனடியாக இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டது. இன்று மாலையில் மும்பை பவன் ஹான்ஸ் தகன மேடையில் உடல் தகனம் செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் கட்டுப்பாடு காரணமாக, இறுதிச் சடங்கில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
ஹரிஷ் ஷா தனது வாழ்க்கையில் பல பாலிவுட் படங்களைத் தயாரித்து இயக்கியுள்ளார். ராஜேஷ் கண்ணா நடித்த மேரே ஜீவன் சாதி மற்றும் ராம் தேரே கிட்னே நாம் போன்ற படங்களைத் தயாரித்ததுடன் , தர்மேந்திரா மற்றும் சத்ருகன் சின்ஹா நடித்த சல்சாலா ரிஷி கபூர்- நீது சிங் நடித்த தன் தவுலத் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
சன்னி தியோலின் ஜால் தி ட்ராப் ஹரிஷ் ஷாவின் கடைசி பாலிவுட் தயாரிப்பாக அமைந்தது. 2003ல் வெளியான இப்படத்தில் தபு, ரீமா சென் மற்றும் அனுபம் கெர் ஆகியோரும் நடித்தனர்.