தளபதி விஜய்க்கு ரசிகரான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்..

My favourite pictures with legendary Vijay Chandrasekhar: Matthew Hayden

by Chandru, Jul 8, 2020, 11:56 AM IST

பல நடிகர், நடிகைகள் கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர், கிரிக்கெட் வீரர் ஒருவர் நம்மூர் ஹீரோவுக்கு தீவிர ரசிகராக இருக்கிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் இந்திய கிரிக்கெட் வீரர் மாஜி கேப்டன் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார். அப்போது தனது இன்ஸ்டாகிராமில் தோனியுடன் இருக்கும் படமாக மட்டுமல்லாமல் உடன் தளபதி விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட்டு வாழ்த்து பகிர்ந்தார்.

அதில், தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்னுடைய சகோதரர் தோனி என்றைக்கும் சந்தோஷமாக இருக்க எனது வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருந்ததுடன் இந்த புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்தமானது. காரணம், இதில் எனது ஃபேவரேட் ஹீரோ சாதனையாளர் விஜய் இருக்கிறார். சென்னை ஐ லவ் யூ எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த படம் சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தபோது விஜய் அங்குச் சென்றிருந்தார். அப்போது தோனி. ஹைடன் ஆகியோருடன் விஜய் இணைந்திருக்கும் புகைப்படத்தை போடோகிராபர்கள் ஆர்வமாக எடுத்துப் பகிர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading தளபதி விஜய்க்கு ரசிகரான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை