அமிதாப்பச்சனுக்கு கொரோனா விரைந்து குணம் அடைய கமல், தனுஷ் விருப்பம்..

Actor Kamal And Dhanush prays speedy recovery To Amitabh Bachchan

by Chandru, Jul 12, 2020, 16:55 PM IST

நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரொனா உறுதியானதையடுத்து இருவருக்கும் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமிதாப் விரைந்து குணம் அடைய வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் மெசேஜ் பகிர்ந்திருக்கிறார். சீனியர் பச்சன்,(அமிதாப்பச்சன்) ஜூனியர் பச்சன் (அபிஷேக் பச்சன்) இருவரும் விரைந்து குணம் அடைய எனது விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய டாக்டர்கள் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது. அமிதாப்பச்சன் விரைவில் குணமாகி திரும்பி வந்து ஐகான் ஆக மிளிர வேண்டும் என்றார்.

அமிதாப்பச்சனுடன் ஷ்மிதாப் என்ற இந்தி படத்தில் இணைந்து நடித்தவர் தனுஷ். இப்படத்தில் தான் கமல்ஹாசன் மகள் அக்‌ஷராவும் நடிகையாக அறிமுகமானார்.
அமிதாப்பிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையறிந்து தனுஷ் ஷாக் ஆனார். அவர் வெளியிட்டுள்ள மெசேஜில் “ அமிதாப் சார் விரைவில் குணமடையுங்கள், நீங்கள் விரைந்து குணம் அடைய எனது உண்மையான பிரார்த்தனைகள் ” எனக் கூறி உள்ளார்.

You'r reading அமிதாப்பச்சனுக்கு கொரோனா விரைந்து குணம் அடைய கமல், தனுஷ் விருப்பம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை