திரைப்படங்கள் மூலம் தங்களுக்கு முதல் வாய்ப்பளித்து அறிமுகப்படுத்தும் இயக்குனர்களை குரு என்றும் தெய்வம் என்றும் நன்றி மறக்காமல் அந்தந்த நடிகர், நடிகைகள் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றனர். நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குனர் பாலாவைத் தனது கடவுள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.இயக்குனர் பாலாவின் பிறந்த தினத்தில் அவருக்கு வாழ்த்துக் கூறிய வரலட்சுமி, எனது கடவுள் பாலா சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்றைக்கு அவர் தான் என்னை ஒரு நடிகையாக உருவாக்கினார். பாலா சாருக்குக் கடவுளின் ஆசிகள் கிடைக்கட்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார் வரலட்சுமி.
பாலா இயக்கிய தாரை தப்பட்டை மூலம் தான் வரலட்சுமிக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இயக்குனர் பாலா விக்ரம் நடித்த சேது, விக்ரம்- சூர்யா இணைந்து நடித்த பிதாமகன் , சூர்யா நடித்த நந்தா, அதர்வா நடித்த பரதேசி. ஆர்யா, விஷால் நடித்த அவன் இவன், ஆர்யா நடித்த நான் கடவுள் போன்ற வெவ்வேறு கதை அம்சங்களுடன் படங்களை இயக்கி அளித்திருக்கிறார். விக்ரம் மகன் துருவ் நடித்த வர்மா படத்தையும் அவர் இயக்கினார். இப்படம் தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆக உருவானது. ஆனால் அப்படம் தயாரிப்பாளர்களுக்கு திருப்தி இல்லாததால் அதை வெளியிடாமல் நிறுத்தியதுடன் ஆதித்ய வர்மா என்ற பெயரில் புதிதாக அதே படத்தை கிரிஷ்யா இயக்கத்தில் உருவாக்கி வெளியிட்டனர்.