2 ஆஸ்கர் வென்ற இசை அமைப்பாளரின் மகள் கீபோர்டில் அசத்தல்..

AR Rahmans daughter Raheema playing the keyboard

by Chandru, Jul 15, 2020, 10:47 AM IST

தோனி வாழ்க்கை படத்தில் நடித்த சுஷாந்த் சுங் ராஜ்புத் தற்கொலை ரசிகர்களை மட்டுமல்லாமல் பல பிரபலங்களின் மனதையும் இன்னும் அரித்துக்கொண்டிருக்கிறது. அவர் நடித்துள்ள கடைசி படம் தில்பெச்சாரா விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. சமீபத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண், தில் பெச்சாரா பட டைட்டில் பாடலைப் பாடும் வீடியோவை வெளியிட்டார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ரஹ்மானின் மகள் ரஹீமா தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறார், இசையில் அதீத ஆர்வம் காட்டுகிறார். ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கார் விருது பெற்ற ரஹ்மானின் மகள் ரஹீமா, கீபோர்டில் 'தில் பெச்சாரா' டைட்டில் பாடல் வாசிப்பதை ரஹ்மான் தனது இணையதள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கதிஜா, ரஹீமா. அமீன் என 3 மகள்கள் உள்ளனர். ரஜினி, ஷங்கரின் எந்திரன் படத்தில் புதிய மனிதா என்ற பாடலை கதிஜா பாடினார். மணிரத்னத்தின் 'ஓ கே கண்மணி' படத்தில் மவுலா வா சலீம் என்ற பாடலை அமீன் பாடினார். இருவருமே பாடகிகள் ஆகியிருக்கின்றனர். மற்றொரு மகள் ரஹீமா தந்தை ரஹ்மான் வழியில் இசை அமைப்பாளராக உருவாகி வருகிறார்.

You'r reading 2 ஆஸ்கர் வென்ற இசை அமைப்பாளரின் மகள் கீபோர்டில் அசத்தல்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை