கும்கி படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்தவர் லட்சுமி மேனன். சுந்தர பாண்டியன், குட்டிப்புலி, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பதுடன் கடைசியாக இறக்க படத்தில் நடித்தார். அப்படத்துக்குப் பிறகு 2 வருடமாகக் கைவசம் படங்கள் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது சிப்பாய், யங் மங் சங், ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ஊரடங்கில் வீட்டிலிருக்கும் இவர் தினமும் நடனப் பயிற்சியில் ஈடுபடுகிறார். தற்போது நடனப் பயிற்சியில் அவர் ஈடுபட்டபோது தரையில் வழுக்கி விழுந்தார். தரையிலிருந்த தண்ணீரைக் கவனிக்காமல் அதன் மீது கால் வைத்ததால் வழுக்கி விழுந்தார். இந்த வீடியோ நெட்டில் வெளியானது.லட்சுமி மேனனுக்கு இரண்டு வருடம் படங்கள் எதுவும் வராத நிலையில் அவர் தொடர்ச்சியாக உடல் வெயிட் போட்டு குண்டானார். அவரது தோற்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் ஏன் இவ்வளவு வெயிட் போட்டீர்கள் என்று கேட்ட வண்ணம் இருந்தனர். இதையடுத்து உடல் இளைக்கப் பயிற்சிகள் செய்து உடலில் வெயிட் குறைத்தார். அதைத் தொடர்ந்து பராமரிக்க நடனப் பயிற்சியில் அவர் ஈடுபடுகிறாராம்.