கந்தசஷ்டி கவசம் விமர்சனம் :ரஜினி கடும் கண்டனம்.. கந்தனுக்கு அரோகரா போட்டு விளாசல்..

by Chandru, Jul 22, 2020, 13:07 PM IST

முருகர் பற்றிய கந்த சஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் என்ற யூ டியூபில் அவதூறாக விமர்சனம் செய்தனர் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. நடிகர்கள் ராஜ்கிரண், சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர்.இதற்கிடையில் கருப்பர் கூட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்தாக சிலர் புகார் கூறினார்கள். அதற்கு திமுக கடுமையான ஆட்சேபனை தெரிவித்ததுடன் திமுகவில் 1கோடி இந்துக்கள் உள்ளனர். திமுக மீது அவதூரை பரப்ப இப்படி எதிர்க்கட்சியினர் சதி செய்கின்றனர் என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கருப்பர் கூட்டம் நிர்வாகிகளை போலீஸ் கைது செய்தது. இரண்டு நாட்களாக இப்பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் நிலையில் பா ஜ கட்சி மாநில தலைவர் எல். முருகன் இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.இந்நிலையில் ரஜினிகாந்த் இது குறித்து இன்று கருத்து வெளியிட்டிருக்கிறார்.
அவர் கூறியதாவது: கந்தசஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி, கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாத படி, தவறு செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்துச் சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காகத் தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மதத்துவேஷமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும். ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே. கந்தனுக்கு அரோகரா'
இவ்வாறு ரஜினி டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Leave a reply

Speed News

 • ஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு..

  ஆக.12ம் தேதி விசாரணை

  ஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.

  சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

  இதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது. 
  Aug 10, 2020, 14:48 PM IST
 • பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா..

  முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார். 

  Aug 10, 2020, 14:41 PM IST
 • குஜராத்தி்ல் முகக்கவசம் அணியாவிட்டால்

  ஆயிரம் ரூபாய் அபராதம்..

  குஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். 

  Aug 10, 2020, 14:33 PM IST
 • ராஜஸ்தானி்ல் நாளை மாலை

  பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..

  ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.

  இந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது. 

  Aug 10, 2020, 14:31 PM IST
 • டெல்லி, மும்பை, சென்னையில்

  கட்டுப்படாத கொரோனா பரவல்

  இந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 

  டெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.  மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.  

  Jul 6, 2020, 12:49 PM IST

More Cinema News