தமிழில் தோல்வி அடைந்த சூர்யா படம் இந்தியில் புதிய சாதனை..

இந்தியா முழுவதும் ரசிகர்கள் ஒரு சில படத்துக்கு ஒரே மாதிரியாக அமோக ஆதரவையும் சில படங்களுக்கு வெற்றி தோல்வி என மாறியும் தீர்ப்பளிக்கின்றனர். அந்த காலத்து ஷோலே, பாபி தொடங்கி இந்த காலத்து அமீர்கான் நடித்த தங்கல் படம் வரை வரவேற்பை தமிழ்நாடு உள்பட எல்லா மாநிலங்களிலும் ஒன்று போல் ரசித்து சூப்பர் ஹிட் படமாக ஆக்கினார்கள். ஒரு சில படங்கள் மும்பையில் ஹிட் மற்ற பகுதிகள் தோல்வி என்று மாறுபட்ட ரிசல்ட் கிடைக்கிறது.

தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, வித்யூத் ஜாம்வால் நடித்த படம் அஞ்சான். இப்படம் தமிழில் வெளியாகி தோல்வி பட லிஸ்ட்டில் இணைந்தது. இதே படம் தற்போது இந்தியில் சாதனை படைத்திருக்கிறது.அஞ்சான் படம் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூ டியூபில் வெளியிடப்பட்டது. இதனை 140 மில்லியன் பார்வையாளர்கள் ரசித்துப் பார்த்துப் பாராட்டி கமெண்ட் வெளியிட்டிருக்கின்றனர். இப்படத்தை வெளியிட்ட யூடியூப் சேனலுக்கு 40 மில்லியன் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். தமிழில் கிடைக்காத வெற்றி இந்தியில் கிடைத்ததை அறிந்து அஞ்சான் படக் குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது. சூர்யா தற்போது நடித்திருக்கும் சூரரைப்போற்று படம் முடிந்து ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இப்படத்தைச் சுதா கொங்கரா இயக்கி உள்ளார். கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு இப்படம் வெளியாக உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds