ஸ்ருதிஹாசன் யூடியூபில் வெளியிடும் முக்கிய நிகழ்வுகள்..

நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன், சமூக ஊடகத்தில் தனது ரசிகர்களுடன் உரையாட நிறைய நேரம் செலவிட்டு வருகிறார். தற்போது தன்னைப் பற்றி ரசிகர்கள் இன்னும் கூடுதலாகத் தெரிந்து கொள்ள புதிய தளத்தில் காலடி வைக்கிறார்.ஆரோக்கியம், உடற்பயிற்சி, சமையற்கலை, ஒப்பனை குறிப்புகள் எனத் தனது சமூக ஊடக ரசிகர்களுக்காகச் செய்து வரும் ஸ்ருதி, தனது இசை சுற்றுப் பயணத்திலிருந்து இதுவரை யாரும் பார்த்திராத காணொலிகளையும், தான் மெட்டமைத்திருக்கும் பாடல்களின் முன்னோட்டங்களையும் தனது யூடியூப் சேனல் வழியாக வெளியிடவிருக்கிறார்.

ஸ்ருதி, பிரிட்டைன் முழுவதும் இசை நிகழ்ச்சிகளுக்காகச் சுற்றுப் பயணம் செய்துள்ளார். தனது முதல் ஆல்பத்துக்கான வேலைகளிலும் ஓய்வின்றி ஈடுபட்டு வருகிறார். தனது யூடியூப் சேனல் மூலமாக தான் உருவாக்கிய படைப்புகளையும், உலகம் முழுவதும் அவர் மேடையேற்றிய இசை நிகழ்ச்சிகளில் இருந்து, பார்த்திராத காணொலிகளையும் வெளியிடவிருக்கிறார்."திரைப்படங்கள் மற்றும் இசை என இரண்டு தளங்களிலும் ஸ்ருதி நிறைய பணியாற்றி வருகிறார். அதைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் அவரது ரசிகர்கள் தெரிந்து கொள்ள, யூடியூப் சேனல் என்பது சரியான இடமாக இருக்கும்" என்கின்றனர் ஸ்ருதியின் நண்பர்கள்.

இதைப் பற்றிப் பேசியிருக்கும் ஸ்ருதி, "சமூக ஊடகத்தில் ரசிகர்களுடன் உரையாடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. தொடர்ந்து இயங்கும் ஒரு யூடியூப் சேனல் தான் அடுத்த சரியான படியாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனது அசல் படைப்புகள் , எனது இசை நிகழ்ச்சிகளின் காணொலிகள், இசை நிகழ்ச்சிகளுக்கு பின்னால் நடந்த ஏற்பாடுகள் குறித்த காணொலிகள் என அனைத்தும் என் யூடியூப் சேனலில் இருக்கும்" என்கிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds