விஜய் ஆண்டனி படத்துக்கு இயக்குனர் மாற்றம்.. பிச்சைக்காரன் 2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

Actor Vijay Antony New Film Pichchaikkaaran 2 Poster Release

by Chandru, Jul 24, 2020, 15:12 PM IST

சலீம், நான், பிச்சைக்காரன் எனப் பல படங்களில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இவர் நடித்த பிச்சைக்காரன் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை இயக்குனர் சசி இயக்கி இருந்தார். இப்படத்தின் 2ம் பாகம் உருவாகவிருப்பதாக கூறப்பட்டு வந்தது. அதை விஜய் ஆண்டனியும் உறுதி செய்திருந்தார்.இன்று விஜய் ஆண்டனியின் பிறந்தநாள். இதையொட்டி பிச்சைக்காரன் 2 படத்தின் அறிவிப்பும் போஸ்டரும் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தைப் பிரியா கிருஷ்ணசாமி இயக்குகிறார். இவர் ஏற்கனவே பாரம் என்ற படத்தை இயக்கி இருந்தார். அப்படம் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு இருமொழிகளில் பிச்சைக்காரன்2 உருவாகவிருக்கிறது. நடிகர் விஜய் ஆண்டனி ஏற்கனவே அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இசை அமைப்பாளராக அறிமுகமாகி பல்வேறு படங்களுக்கு இசை அமைத்த விஜய் ஆண்டனி, 2012ஆம் ஆண்டு நான் என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு நடிப்பிலேயே கவனம் செலுத்தி வருகிறார். முதல் படமே அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்த நிலையில் அடுத்தடுத்து சலீம், இந்தியா பாகிஸ்தான் போன்ற பல படங்களில் நடித்தார். கொரோனா ஊரடங்கால் படங்கள் முடங்கி இருக்கும் நிலையில் தயாரிப்பாளரின் சிரமம் குறைவதற்காக தனது சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிதம் குறைத்துக் கொள்வதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading விஜய் ஆண்டனி படத்துக்கு இயக்குனர் மாற்றம்.. பிச்சைக்காரன் 2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை