திருமணம் என்று சொல்லி ரசிகர்களை ஏமாற்றிய பிரபல நடிகை.. காத்திருந்த ரசிகர்கள் கடுப்பாயினர்..

Advertisement

இன்னும் 3 நாள் காத்திருங்கள் என்று சொல்லி தாலி கட்டுவது போன்று, விரல்களில் மாற்றிக்கொள்ள மோதிரங்கள் தயாராக இருப்பது போலவும் வீடியோ வெளியிட்டு தனது திருமண அறிவிப்பை வெளியிடப்போவது போல் போக்குகாட்டி கடைசியில் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் பிரபல நடிகை.காதல் கொண்டேன் படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து பிரபலம் ஆனார் சோனியா அகர்வால். பின்னர் இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 10 வருடம் அவருடன் வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்தார். பின்னர் செல்வராகவன் மறுமணம் செய்துக்கொண்டு ஒரு குழந்தைக்குத் தந்தையும் ஆகிவிட்டார். சோனியா பழையபடி சினிமாவில் நடிக்க வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சோனியா அகர்வால் தனது இணைய தள பக்கத்தில் திருமணம் செய்வது போன்று தாலிகட்டும் வீடியோ வெளியிட்டார். 3 நாள் காத்திருங்கள் நல்ல சேதி தெரியும் என்று குறிப்பிட்டார். மறுநாள் இரண்டு தங்க மோதிரங்கள் படம் வெளியிட்டு இன்னும் இரண்டு நாள் பொறுங்கள் என்று சொன்னார்.
சோனியா அகர்வால் தனது 2வது திருமணம் பற்றி அறிவிக்கப்போகிறார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்ததுடன் அவருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சொன்னார்கள் . கடைசியில் காத்திருந்த ரசிகர்கள் கடுப்பாகும் வகையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து திருமணத்தை நடத்தித் தரும் நிறுவனம் தொடங்கி இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

சோனியாவின் இந்த அறிவிப்பால் ஏமாந்த ரசிகர்கள், அப்ப உங்களுக்குத் திருமணம் இல்லையா ?என்று கவலையுடன் மெசேஜ் பகிர்ந்துள்ளனர். சோனியா அகர்வால் தற்போது வன்முறை என்ற படத்திலும் தடம் தமிழ்ப் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார். நடிப்பில் கவனம் செலுத்தும் நிலையில் சோனியா இப்போதைக்குத் திருமணம் பற்றி எதுவும் யோசிக்கவில்லை என்று அவரது தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>