கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் ஹீரோ மற்றும் தந்தை..

Advertisement

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது போல் தமிழ் சினிமா ஹீரோவும் அவரது தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர்.பிரபல நடிகர் விஷால். இவரும் இவரது தந்தையும், மகாபிரபு போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது தெரிய வந்ததை அடுத்து இருவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டனர். அதில் இருவரும் தற்போது குணம் அடைந்திருக்கின்றனர் என்று தகவல் வருகிறது.

விஷால் தற்போது சக்கரா படத்தில் நடித்து வருகிறார். சைபர் கிரைம் திரில்லராக இப்படம் உருவாகிறது. ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, சிருஷ்டி டாங்கே, மனோபாலா, ரோபோ ஷங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள். எம்.எஸ்.ஆனந்தன் இயக்குகிறார். யுவன்ஷங்கர் ராஜா இயக்குகிறார். கடந்த மாதம் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது.
முன்னதாக துப்பறிவாளன் 2 படத்தில் மிஷ்கின் இயக்கத்தில் நடித்து வந்தார் விஷால், இதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்துக்கு பைனான்ஸை கூட்ட வேண்டும் என்று மிஷ்கின் கூற அதற்கு விஷால் மறுக்க இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து மிஷ்கின் அப்படத்திலிருந்து விலகினார். பின்னர் படத்தை இயக்கும் பொறுப்பை விஷாலே ஏற்றுக்கொண்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஷால் அதிலிருந்து மீண்டது பற்றி டிவிட்டரில் கூறியிருப்பதாவது: எனது தந்தைக்கு கொரேனா தொற்று உறுதியானது. அவருக்கு உதவியபோது எனக்கும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டது. எனது மேலாளருக்கும் இதே நிலை தான் இருந்தது. மூவரும் ஆயுர்வேத மருந்து எடுத்துக்கொண்டோம், ஒரு வாரக் காலத்திற்குள் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டோம். தற்போது நலமாக உள்ளோம். மேலும் இந்த தகவலைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு விஷால் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>