என்னை ஒரு நாயாக கூட மதிக்கவில்லை.. உயிர் பிழைத்து வந்த நடிகர் வேதனை..

by Chandru, Jul 26, 2020, 12:57 PM IST
ரஜினிகாந்த், கமல்ஹாசன் விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜீத், விக்ரம் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் சண்டைக்காட்சியில் நடித்தவர் பொன்னம்பலம். இவர் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்குப் பணம் இல்லை எனக்கு உதவி செய்யுங்கள் என்று மூக்கில் வென்டிலேட்டர் கருவியுடன் ஆக்ஸிஜன் சுவாசித்தபடி வேண்டுகோள் வைத்து வீடியோ வெளியிட்டார்.

அறுவை சிகிச்சை முடிந்து தற்போது உடல்நிலை தேறி வந்திருக்கிறார். அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:

பொன்னம்பலம் என்றதும் அவர் ஆஜான பாகு தோற்றம் கொண்டவர் பெரிய ஹீரோக்களுடனெல்லாம் நடித்திருக்கிறார். எப்படியும் 500 கோடி வைத்திருப் பார் என்று நினைப்பார்கள். எனக்கு அவ்வளவெல்லாம் சம்பளம் கிடையாது நாட்டாமையில் எனது சம்பளம் 37 ஆயிரம் ரூபாய். திருமணத்துக்கு முன் சினிமாவில் சம்பாதித்தையெல்லாம் நான் எனது குடும்பம், தங்கைகளுக்குக் கல்யாணம் சீர்வரிசை என்று செலவழித்திவிட்டேன். எனக்கென்று எதுவும் சேர்த்து வைக்க வில்லை. இப்போதும் வாடகை வீட்டில் தான் குடியிருக்கிறேன். திருமணத்துக்கு முன்பு எனக்கு வந்த வருமானம் தொடர்ந்து வரும் என்று நினைத்தேன் அதனால் வந்தவற்றையெல்லாம் குடும்பத்திற்காகச் செலவழித் தேன். சேர்த்து வைக்காதது ஒரு குறை.

இப்போது எனக்குச் சம்பாத்தியம் இல்லை என் குடும்பத்தைக் காப்பாற்ற முடிய வில்லை. இருக்கும் கடைசி ஒரு கிராம் தங்கத்தைகூட விற்றுத்தான் எனக்கு வைத்தியம் பார்த்திருக்கிறேன்.எனக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் தமிழ்நாடு ஆந்திரா, கேரள, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ரசிகர்கள் போன் மூலம் விசாரித்து குணம் அடையப் பிரார்த்தனை செய்வதாகக் கூறினார்கள் அந்த பிரார்த்தனைதான் என்னைக் காப்பாற்றி இருக்கிறது. சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் அதனால் உடம்பை முதலில் கவனி என்று பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்வேன் கடைசியில் எனக்கு உடல்நிலை மோசமாகி விட்டது. டாக்டர்கள் எனது உடல் நிலையை நன்கு பார்த்து சிகிச்சை அளித்தனர் அவர்களுக்கு எனது நன்றி.

எனது தந்தை இறந்தபிறகுதான் நான் ஸ்டண்ட் நடிகனாக ஆனேன். அந்த காலத்தில் எங்கள் வீட்டில் வறுமை கோரத் தாண்டவம் ஆடியது. சினிமாவுக்கு போகிறேன் என்று சொன்னபோது பொய் சொல்லாதே, திருடாதே இல்லாவிட்டால் சொல் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளலாம் என்றார். என் தாய் சொன்னபடி நான் வாழ்கிறேன் அன்றுதான் ஜெய்ஸ்ரீராம் என்றேன் அன்றிலிருந்து இன்றுவரை சொல்லிக் கொண்டிருக்கிறேன். எனக்கு கிட்னி பிராப்ளம் இருப்பதை 5 வருடத்துக்கு முன்பே சொன்னார்கள் அதுபற்றி கேர் செய்யாமல் விட்டுவிட்டேன் அது இவ்வளவு பெரிய பாதிப் பாகும் என்று எண்ணவில்லை.

அடுத்த வேளை முருந்து வாங்கிடக் காசு இல்லை என்றபோதுதான் முதலில் சரத்குமார் சாருக்கு போன் செய்து உதவிகேட்டேன் உடனே அவர் டி.சிவாவிடம் போன் செய்து ரூ 50 ஆயிரம் தரச்சொன்னர். அதை வைத்துத்தான் எனக்கு முதல் ஆபரேஷன் நடந்தது. கார்த்தி, விஷால் 20 ஆயிரம் தந்தார்கள். அதை வைத்து மருந்து வாங்கினேன். கமல், ரஜினிசார் நலம் விசாரித்தார்கள். கமல் சார் மருத்துவமனை பில் கட்டுவதாகக் கூறினார். ரஜினி சார் எனக்கு கிட்னி மாற்று ஆபரேஷன் செய்வதாக கூறியிருக்கிறார். அதற்கு இன்னும் 6 மாதத்துக்கு மேல் ஆகும். எனக்கு வீடு இல்லை எனவே தங்குவதற்கு உதவினால் நன்றாக இருக்கும் . என்னைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாதவர்கள் ஸ்டன்ட் யூனியன் தான். ஐநூறு, ஆயிரம்பேர் இருக்கிறார்கள். ஒருவர் கூட போன் செய்து விசாரிக்கவில்லை.

காயத்ரி ரகுராமிடம் கட்சியிலிருந்து உதவ கேட்டேன். அவர் பா.ஜ தலைவர் எல் முருகன் சாரிடம் சொல்லி அடுத்த நாளே எனக்கு இரண்டு லட்சம் கொடுத்து உதவினார். ஸ்டண்ட் யூனியனிலிருந்து உதவி செய்ய வில்லை. என்னை ஒரு நாயாகக் கூட மதிக்க வில்லை. எனக்கு யார் பணமும் வேண்டாம் எனது ரிடையர்மென்ட் பணமாவது தாருங்கள். கொரோனா காலத்தில் பணமும் இல்லாமல் இருந்து நோயாளியாகவும் இருந்ததால் எனக்கு 20 முறை தற்கொலை எண்ணம் வந்தது. விஜய், அஜீத், லாரன்ஸ் போன்றவர்களும் எனக்கு உதவு வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பொன்னம்பலம் கூறினார்.

READ MORE ABOUT :

Leave a reply

Speed News

 • ஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு..

  ஆக.12ம் தேதி விசாரணை

  ஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.

  சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

  இதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது. 
  Aug 10, 2020, 14:48 PM IST
 • பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா..

  முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார். 

  Aug 10, 2020, 14:41 PM IST
 • குஜராத்தி்ல் முகக்கவசம் அணியாவிட்டால்

  ஆயிரம் ரூபாய் அபராதம்..

  குஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். 

  Aug 10, 2020, 14:33 PM IST
 • ராஜஸ்தானி்ல் நாளை மாலை

  பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..

  ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.

  இந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது. 

  Aug 10, 2020, 14:31 PM IST
 • டெல்லி, மும்பை, சென்னையில்

  கட்டுப்படாத கொரோனா பரவல்

  இந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 

  டெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.  மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.  

  Jul 6, 2020, 12:49 PM IST

More Cinema News