தனுஷ் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக ரகிட ரகிட..

Dhanush Birthday: Kaarthick Subbaraj wishes

by Chandru, Jul 28, 2020, 12:27 PM IST

நடிகர் தனுஷுக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் தனுஷ் பிறந்தநாள் ஹேஷ் டேக் உருவாக்கி அதை டிரெண்டிங் செய்து வருகின்றனர். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனுஷுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருப்பதுடன் தனது இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஜெகமே தந்திரம் படத்திலிருந்து ரகிட ரகிட என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார்.

இந்த பாடல் வாழ்க்கையின் தத்துவத்தை உணர்ந்துவதுடன் வாழ்க்கையை எப்படிக் கையாள வேண்டும் என்பதையும் வெளிப்படுத்துகிறது எனத் தெரிவித்திருக்கிறார். பாடலாசிரியர் விவேக் தெரிவித்துள்ள வாழ்த்தில்.தனுஷ் பெரிய சாதனையாளராகி வருகிறார் என்கிறார்கள். ஏற்கனவே அவர் சாதனையாளராக இருக்கிறார். தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.உங்கள் வடிவத்தில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒரு எழுச்சியூட்டும் திறமையை எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறார்.

You'r reading தனுஷ் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக ரகிட ரகிட.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை