தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ராவுறியாளா என்ற கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் ஏமாற்றி விற்பனை செய்துள்ளது. அந்த நிலங்களை அங்குள்ள விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்திருக்கின்றனர் விவசாயிகளிடம் ஏக்கருக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்து நிலத்தை வாங்கிய நிறுவனம் அதனை, மற்றவர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது.இதுபற்றி விவரம் தெரியாத நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் மனைவி அஞ்சலி ஆகியோர் பல கோடிகள் கொடுத்து நிலம் வாங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில் ரியல் எஸ்டேட் பங்குதாரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மோசடி அம்பலத்திற்கு வந்திருக்கிறது. நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர் சுதீர் ரெட்டி இதனை அம்பலப்படுத்தி இருக்கிறார்.விவரம் அறிந்து சம்மந்தப்பட்ட நடிகைகள் மற்றும் அங்கு நிலம் வாங்கியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த புறம்போக்கு நிலம் நீர் பிடிப்பு ஏரியா என்பதால் அதை விற்கக் கூடாது என்று அரசு அறிவித்திருக்கிறது.தற்போது இது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. நடிகைகளும் சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தயக்கம் காட்டி வருகின்றனர்.நயன்தாராவை பொருத்தவரை கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். தமிழ்ப் படத்திற்கு இரண்டு கோடியும், தெலுங்கு படத்திற்கு 3 கோடியும், மலையாள படத்திற்கு ஐம்பது லட்சமும் நயன்தாரா வாங்குவதாகக் கூறப்படுகிறது.