லட்சுமி ராமகிருஷ்ணனை மீண்டும் வம்பிழுக்கும் வனிதா.. மீண்டும் பஞ்சாயத்து பண்ண விடமாட்டேன்..

by Chandru, Aug 1, 2020, 13:59 PM IST

நடிகை வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்தாலும் செய்தார் அந்த சர்ச்சை அனுமார் வால் போல் நீண்டு செல்கிறது. அனுமார் தீயைக் கொளுத்திப் போட்டது போல் இந்த தீயும் குபுகுபு வென எரிகிறது. வனிதா 3வதாக பீட்டர் பால் என்பவரை மணந்தார், வனிதா ஏற்கனவே திருமணம் செய்த கணவர்களிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டார். ஆனால் பீட்டர் பால் ஏற்கனவே மணந்த எலிசெபத் ஹெல்ன் என்பவரிடம் விவாகரத்து பெறாமல் வனிதாவைத் திருமணம் செய்திருக்கிறார்.

முதல் மனைவி இருக்கும்போது பீட்டர் பால் செய்த திருமணம் பற்றியும் அவரை வனிதா மணந்தது பற்றியும் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி போன்றவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள். இதுகுறித்து வனிதா போலீசில் புகார் கொடுத்தார். வீடியோ நேரலையில் வனிதாவும், லட்சுமி ராமகிருஷ்ணனும் கடுமையாக மோதிக் கொண்டனர். லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா ஒருமையில் பேசி விரட்டினார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவிடம் ரூ 1.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டிஸ் அனுப்பினார். அதனை வனிதா டிவிட்டர் மூலம் வெளிப்படுத்தி இருந்தார். இந்த விவகாரம் இரண்டு நாட்கள் சூடு தணிந்த நிலையில் இருந்தது. தற்போது வனிதா மீண்டும் இருவரையும் வம்பிழுத்திருக்கிறார்.

வனிதாவிடம் ஒரு ரசிகர்,வறுமையில் இருக்கும் குடும்பத்தைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் பஞ்சாயத்து என்ற பெயரில் பேசி செய்யும் கொடுமையை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் இப்படி செய்கிறார்கள் என்று லட்சுமி செய்து வந்த நிகழ்ச்சி பற்றி வனிதாவிடம் சொல்ல அதற்குப் பதில் அளித்திருக்கும் வனிதா உண்மை.. அவரை நான் விடப்போவ தில்லை.. இனிவொருபோதும் மீண்டும் அவர் பஞ்சாயத்து ஷோ நடத்த விட மாட்டேன் எனப் பதில் அளித்திருக்கிறார்.லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, ரவீந்தர். சூரியாதேவி ஆகியோர் கேம் ஓவர் என்று கூறியிருக்கிறார்களே என இன்னொரு ரசிகர் கேட்டதற்குப் பதில் அளித்துள்ள வனிதா,அவர்கள் எப்போதும் விளையாட்டு குழந்தைகளாக இருந்ததில்லை.. அவர்கள் ஜோக்கர்கள் என்று சொல்லி நான்கு பேரையும் மீண்டும் உசுப்பி விட்டிருக்கிறார்.


More Cinema News

அதிகம் படித்தவை