பிரபல நடிகர்கள் மீது நடிகை பரபரப்பு புகார்.. எனக்கு ஏதாவது நடந்தால் இவர்கள் தான் பொறுப்பு..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் மீரா மிதுன். இவர் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அடிக்கடி சர்ச்சை கருத்துக்கள் கூறுவது தனது இணைய தள பக்கத்தில் படுகவர்ச்சி படங்களை வெளியிடுவது பாய்ஃபிரண்டுடன் நடனம் ஆடுவதுபோன்ற வீடியோக்கள் வெளியிடுவது என்று தன்னை வலைத் தள பக்கத்தில் எப்போதும் பரபரப்பாகப் பேசும்படி வைத்துக்கொள்வார். ரஜினிகாந்த் விஜய், தனுஷ், திரிஷா போன்ற பிரபலங்களை வம்புக்கு இழுப்பது போல் கருத்துக்கள் தெரிவித்துள்ளார் மீரா மிதுன். அவரது சர்ச்சை கருத்துக்களுக்குச் சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் பதிலடி கொடுப்பார்கள்.

இந்நிலையில், நடிகர் சூர்யாவுக்கு நடிக்கவே தெரியாது. சாதாரண காட்சிக்குக் கூட 20 டேக் வாங்குவார் எனச் சரமாரியாகத் தாக்கி பேசியிருந்தார் மீரா மிதுன். தற்போது சூர்யா, விஜய் ரசிகர்கள் தன்னை மிரட்டுவதாகத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார் மீரா.அவர் கூறியுள்ளதாவது: சூர்யா, விஜய் ரசிகர்களிடம் இருந்து, மோசமான மெசேஜ்கள், மொபைல் அழைப்புகள், கற்பழிப்பு மற்றும் மரண அச்சுறுத்தல்கள் வருகின்றன. எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு சூர்யா விஜய் தான் காரணம். என் மொபைல் எண்ணை, நெட்டில் குழுக்களுக்கு பரவ விட்டுள்ளனர். என அவர் கூறியுள்ளார்.

READ MORE ABOUT :