கொரோனா தொற்றால் காலையில் கவலைப்பட்ட ஹீரோ மாலையில் துள்ளி குதித்தார்.. ஆத்தா நா பாஸாயிட்டேன் ..

by Chandru, Aug 8, 2020, 18:38 PM IST

பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாராய்,ஆராத்யா ஆகியோர் கடந்த 2 வாரத்துக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் குணம் அடைய ரசிகர் பல இடங்களில் சிறப்புப் பூஜை நடத்தியதுடன் சில இடங்களில் ஹோமம் வளர்த்து பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் அமிதாப். ஐஸ்வர்யாராய் ஆராத்யா குணம் அடைந்து சமீபத்தில் வீடு திரும்பினர். ஆனால் அபிஷேக் பச்சன் மட்டும் கொரோனா தொற்று குணம் ஆகாமல் மருத்துவமனையிலேயே சிகிச்சையில் இருந்தார். 28 நாட்களாகியும் கொரோனா குணம் ஆகவில்லை என்ற கவலையில் இருந்தார்.
இதுபற்றி இன்று காலை வரை அவர் சோகத்தில் இருந்தாலும் தனக்கு தானே ஆறுதல் சொல்லிக் கொள்ளும் வகையில் , இந்த கொரோனாவிலிருந்து நான் சீக்கிரமே மீண்டு வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அபிஷேக் பச்சனுக்கு இன்று மாலை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அதில் அவருக்கு கொரோனா தொற்று நெகடிவ் என்று தெரிய வந்தது. தனக்கு கொரோனா தொற்று குணம் ஆனதும் ஆத்தா நான் பாஸாயிட்டேன் ரேஞ்சுக்கு மகிழ்ச்சியில் திளைத்தார் அபிஷேக்.இதுபற்றி அவர் வெளியிட்ட மெசேஜில். சத்தியம் சத்யம் தான். இன்று மாலை எனக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று நெகடிவ் என்று தெரிய வந்தது. வைரஸ் தொற்றைத் தோற்கடித்துக் காட்டுவேன் என்று கூறியிருந்தேன் அல்லவா? அதைச் செய்துகாட்டிவிட்டேன். எனக்காகவும், எனது குடும்பத்துக்காகவும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. நானாவதி மருத்துவமனை டாக்டர்கள், நர்ஸ் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி. அவர்கள்தான். இதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் எனத் தெரிவித்திருக்கிறார் அபிஷேக் பச்சன்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை