கோகுலத்தில் சீதை உள்ளிட்ட பல படங்கள் தயாரித்தவர் கொரோனா தொற்றால் மரணம்..

by Chandru, Aug 10, 2020, 16:15 PM IST

லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.முரளிதரன், ஜி.வேணுகோபால், வி.சுவாமி நாதன் ஆகியோர் இணைந்து அரண்மனை காவலன், வேலுச்சாமி, மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, தர்மசக்கரம், பகவதி, உன்னை நினைத்து, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வீரம் வெளஞ்ச மண்ணு, பிரியமுடன், உன்னருகே நானிருந்தால், உனக்காக எல்லாம் உனக்காக, உன்னைத்தேடி, கண்ணன் வருவான், உள்ளம் கொள்ளை போகுதே, அன்பே சிவம், தாஸ், ஒருவன், சிலம்பாட்டம், புதுப்பேட்டை, ஆட்ட நாயகன், சகலகலா வல்லவன் உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்தனர். இவர்களில் ஒருவரான வி.சுவாமி நாதன் இன்று காலமானார்.

கடந்த ஒரு வாரமாக கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வந்தார் சுவாமி நாதன். அவருக்கு வயது 67. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறக்கும் முதல் தமிழ்ப்படப் பிரபலம் சுவாமிநாதன். சுவாமிநாதனுக்கு லலிதா என்கிற மனைவியும் அசோக் ,அஸ்வின் என இரு மகன்கள் உள்ளனர். அஸ்வின் குமார், நகைச்சுவை குணசித்ர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். விக்ரம் பிரபு நடித்த கும்கி படத்தில் நடித்ததால் கும்கி அஸ்வின் என்று இவர் படங்களில் நடித்து வருகிறார்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை