மூச்சு திணறலால் அவதிப்பட்ட சீனியர் நடிகர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தார்...

by Chandru, Aug 10, 2020, 18:21 PM IST

இந்தி சீனியர் நடிகர்களில் ஒருவர் சஞ்சய் தத், இவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் வெளி நாடு சென்று கொரரோனா ஊரடங்கில் திரும்ப முடியாமல் அங்கேயே தங்கி உள்ளனர். மும்பையில் வீட்டில் தனிமையில் இருந்து வந்தார் சஞ்சய் தத். திடீரென்று மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவர் நேற்று முன் தினம் இரவு மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று இல்லை என்று தெரிந்தது. சஞ்சய் தத்துக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறலுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் குணம் அடைந்தார்.

மூச்சுத் திணறல் பிரச்சனையிலிருந்து சஞ்சய் குணம் ஆனதை அடுத்து அவர் இன்று வீடு திரும்பினார். மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்த அவரை அங்கிருந்த ரசிகர்கள் கை அசைத்து வாழ்த்தினார்கள் அவர்களுக்கு சஞ்சய் தத் பதிலுக்கு கை அசைத்து நன்றி தெரிவித்தார்.பாலிவுட்டில் ஏற்கனவே அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா போன்றவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அமிதாப், ஐஸ்வராராய், ஆராத்யா ஆகியோர் சுமார் 20 நாட்களுக்குள் குணம் அடைந்து வீடு திரும்பினர். ஆனால் அபிஷேக் பச்சன் 28 நாட்கள் சிகிச்சைக்கு பிறகே குணம் அடைந்து வீடு திரும்பினார்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை