நடிகைக்கு பிரபல நடிகர் பதிலடி.. தரம் தாழ்ந்தவருக்கு எதிர்வினை வேண்டாம்..

by Chandru, Aug 11, 2020, 15:11 PM IST

பிக்பாஸ் ஷோவில் பங்கேற்றதுடன் , எட்டு தோட்டாக்கள் தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்தவர் மீரா மிதுன். நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதூறாகக் கருத்துக்களை வெளியிட்டதால் நடிகர்களின் ரசிகர்கள் மீராவைத் திட்டித் தீர்த்தனர். இதையடுத்து மீரா மிதுன்,எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு விஜய் சூர்யா தான் காரணம் என ட்விட்டாரில் மெசேஜ் பதிவு செய்ததுடன் அவர்களது ரசிகர்களையும் கடுமையாக திட்டித் தீர்த்தார். இதற்கிடையில் விஜய் மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் மீரா மிதுன் மீது போலீசில் புகார் அளித்தனர். அதே சமயம் இயக்குனர் பாரதிராஜா நடிகை மீரா மிதுனுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

கண்ணியமாக வாழும் நடிகர்கள் விஜய், சூர்யா மீது அவதூறாகப் பேசுவதை இத்துடன் நிறுத்திக்கொள். பப்ளிசிட்டிக்காக இதுபோன்ற செயலில் ஈடுபடாதே என எச்சரித்திருந்தார்.பாரதிராஜாவுக்கு நன்றி சொல்லி இன்று சூர்யா வெளியிட்டுள்ள மெசேஜில், எனது தம்பிகள், தங்கைகளின் நேரமும் சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு பாரதிராஜாவுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள் எனத் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஜூன் மாதம் சூர்யா வெளியிட்ட பதிவில், தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டாம் என மறைமுகமாக தன் மீதான நடிகையின் அவதூறு கருத்துக்களுக்கு சூடான பதில் அளித்திருந்தார் . அந்த மெசேஜை இன்று மீண்டும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை